உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

04.05.23 ஆக்கம் -267 பரிதாபம் தாயின் மடியில் தவண்டு புரண்டு உருண்ட மழலை வளர்ந்து குலம் காக்குமென நினைத்தது நிலை குலைந்து போனதே சின்னஞ் சிறுசாய் இருக்கையிலே பிஞ்சில் பழுத்தது போல மிதமிஞ்சிய ஆசையில் பென்னம் பெரிய களவில் கன்னம் வைத்துக் கையோடு பிடிபட்டதே அந்நிய நாட்டுக் கலாச்சாரம் தவறான நட்பு , தடுமாறும் குடி போதையில் பாதை மாறி நின்றதே நொடியில் பணஞ் சேர்க்க கூத்தாடி பற்றிக் கஞ்சாவை விற்கவே பிடிபட்டு சீக்கிரமாய் சிறை புகுந்து சீரழிந்து உருக்குலைந்து உயிர் போனதே பரிதாபமாய் .