உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ஜெயம் தங்கராஜா

ஜெயம் தங்கராஜா

கவி 649 வாழ்க்கை இதனால் ஆளப்படுகின்றது தாயிடம் கேட்காமலே கிடைப்பது தந்தையிடம் அளவற்றுக் கிடப்பது உறவுகளால் கிடைத்துவிடின் வரமாகும் இறைவனுக்கு ஒத்ததே இதுவாகும் நட்பின் தரையில் முளைக்கும் காதலும் ஒன்றுவிடாமல் சேமிக்கும் உளங்கொண்டவர் உடல் அழகாகும் உண்மையில் கொண்டால் பாக்கியமாகும் உலகத்திலே உயர்ந்த பரிசு அகிலத்தில் விலை மதிப்பில்லாதது எதையும் எதிர்பாராமல் கொடுப்பது பகிர்ந்து கொண்டால் ஊறுவது இனம் மொழி அறியாதது இரக்கம் கருணையின் தாயகமானது உண்மையானது எவரையும் ஏமாற்றாதது வாழ்வின் அடிப்படையின் அடக்கமானது இதன் இராட்சியத்தில் சந்தோசமே இதன் வெளிப்பாடு பரிசுத்தமே கொண்டாடப்பட வேண்டிய ஒன்று புண்ணியம் இதுவென என்று ஜெயம் 19-04-2023 https://youtu.be/cZ_wFfa_LRs