உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ரஜனி அன்ரன்

ரஜனி அன்ரன்

“ பேராசான் கைலாசபதி “...கவி...ரஜனி அன்ரன் (B.A) 06.04.2023 உலகறிந்த தமிழ் அறிஞன் பல்கலை வித்தகன் யாழ் பல்கலைக்கழகத்தில் தலைவராய் கலைத்துறைத் தலைவராய் துணைவேந்தராய் பணியாற்றிய அறிஞன் திறனாய்வின் முன்னோடி பழந்தமிழ் இலக்கிய ஆய்வாளன் நவீன இலக்கியங்களைப் புடம்போட்ட தீரன் ஏப்ரல் ஐந்தில் உதித்தாரே ! இலக்கியத்தில் திறனாய்வு செய்து இலக்கியம் இதழ் கல்வித் துறையென பரந்து விரிந்தது பேராசானின் பணி பத்திரிகைத் தொழிலிலும் பதித்தார் கால் பணியினை ஆற்றினார் தினகரனிலும் இளங்கலைமாணி முதுகலைமாணியாகி இங்கிலாந்தின் பேர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டத்தினையும் பெற்றாரே ! இலக்கியத் துறைக்கு சேவைகள் செய்து இலக்கியமும் திறனாய்வும் ஒப்பியல் இலக்கியம் பண்டைத்தமிழர் வாழ்வும் வளமுமென இலக்கிய நூல்கள் பலதையும் ஆக்கி ஈழத்து தமிழ் இலக்கிய உலகிற்கு ஈடில்லா சேவைகள் செய்து அகவை நாற்பத்தி ஒன்பதிலே இவ்வுலகை விட்டு ஏகினாரே ! https://www.youtube.com/watch?v=NNr7TEL_-8M