உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ரஜனி அன்ரன்

ரஜனி அன்ரன்

“ கரையும் தண்ணீரில்,நிறையும் கழிவுகள் “கவி..ரஜனி அன்ரன்(B.A)30.03.2023 இயற்கை அன்னையின் கொடையினை கண்டங்களை ஒன்றிணைக்கும் கடலினை கப்பல் போக்குவரத்தின் தளத்தினை கடல் வாணிபத்தின் களத்தினை வாழ்வின் ஆதார வளத்தினை கழிவுகளைக் கொட்டும் குப்பைத் தொட்டியாக்கி கரையும் தண்ணீரில் கழிவுகளை நிறைக்கின்றனரே ! கடலை ரசிக்க காலாற நடக்க சுத்தக் காற்றைச் சுவாசிக்க முடியல தொற்றுக்களும் விரைவில் பரவ சுற்றுச் சூழலும் மாசடைய எண்ணைக் கழிவுகளும் நிறைந்து வழிய நெகிழிகளும் நெளியுது கடலிலே கழிவுகளினால் அழிவுகளே மிச்சம் ! கடல்வாழ் உயிரினங்கள் அழிய அரியவகை உயிர்களும் அருகிப் போக நிறைகின்ற கழிவுகளால் அழிவே நிலை தடுமாறுகின்றாள் புவித்தாயும் கண்ணீர் வடிக்கின்றாள் கடல்த்தாயும் உயிர்நீராம் தண்ணீருக்கு ஊறா? ஊற்றான நீருக்கும் இங்கு கேடா? நிறையும் கழிவுகளால் குன்றுதே வாழ்வும் ! https://www.youtube.com/watch?v=VkEoYZOBio8