உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

பவானி மூர்த்தி

பவானி மூர்த்தி

நினைத்தாலே இனிக்கும் பள்ளிப் பருவம் பள்ளிப் பருவம் நினைத்தால் இனிக்கும்/ பாச மழையில் அன்னை இருப்பாள்/ துள்ளி ஒடி மகிழும் பருவம்/ துன்பம் அறியாப் பள்ளிப் பருவம்/ அள்ளி அணைத்தே அமுதும் ஊட்டி/ அகிலம் தன்னை வெல்லச் சொல்லி/ உள்ளம் எங்கும் உவகை கொண்டே/ உலகை ஆளும் உணர்வின் பருவம்/ நினைத்தால் இனிக்கும் பள்ளிப் பருவம்/ நித்தம் இன்பம் தந்த பருவம்/ எனையும் ஈர்த்த இனிமைக் காலம்/ என்றும் இனிக்கும் மகிழ்வின் காலம்/ புனையும் கவியில் கன்னல் சுவையே/ புவியில் இன்பம் இன்பம் தானே/ முனைந்த வாழ்வின் முழுதும் இன்பம்/ முற்றும் முயற்சி அழகின் பருவம்/ இன்பம் தந்த இனிய பருவம்/ ஈட்டும் இணையும் இல்லாப் பருவம்/ துன்பம் இல்லாத் தூய பருவம்/ துடிக்கும் மனதில் தூது செல்லும்/ வன்மம் இல்லா வளமைப் பருவம்/ வாழ்வில் நினைக்க இனிக்கும் பருவம்/ கன்னல் சுவையை அளிக்கும் பருவம்/ காலம் போற்றும் பள்ளிப் பருவம்/ மெல்ல மெல்ல மோகம் கொள்ளும்/ மெதுவாய் நெஞ்சில் நிலைக்கும் அழகாய்/ நல்ல பெண்ணாய் பள்ளிச் சென்று/ நன்றாய் பாடம் படித்த பருவம்/ வல்ல கல்வி வகையாய் நாளும்/ வருத்தம் நீங்க கற்ற பருவம்/ சொல்ல சொல்ல இனிக்கும் பருவம்/ சொல்லில் அடங்காச் சொக்கும் பருவம்/ சொல்லில் அடங்கா சொக்கும் பருவம்/ இனிய வணக்கம் வாணி அன்பான நன்றியுடனும் வாழ்த்துக்கள்