உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

அபிராமி கவிதாசன்.

அபிராமி கவிதாசன்.

21.03.2023 சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் -215 தலைப்பு ! "விடியல்" விடியல் பொழுதே வருக வருக விண்ணில் ஒளிகொண்டு விளக்காய் வருக // பட்சிகள் நாதம் தருக தருக பலவண்ண குரலில் பாடல் தருக // மாசற்ற காற்றில் சிலுசிலு தென்றல் மனதைத் தொட்டு மகிழ்வாய் செல்க // நிலமகள் குளிர நீரும் தெளித்து நித்தம் முற்றத்தில் கோலம் வரைக// வைகறை மலர்கள் வாசம் வீசிட மோகம் கொண்டு வண்டுகள் சேர்க // நிலைப்பெண் மெல்ல மேற்கில் மறைய நித்தில பரிதி கிழக்கில் மலர்க / நனிமிகு நன்றிகள்.