உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ஜெயம் தங்கராஜா

ஜெயம் தங்கராஜா

கவி 644 வியப்பில் விழிகள் ஒருவிதமான மகிழ்ச்சியான ஆச்சரியம் பெருமிதமான செயல் ஆனந்த பூச்சொரியும் உருவத்தில் சிறியவளின் ஆயிரம் பிரசவிப்பு அரும்பு அவளின் ஆக்கங்களின் அணிவகுப்பு வியப்பால் விழிகள் அகல விரிகின்றன உயர்வாள் இமயமென படைப்பினூடு தெரிகின்றது பயத்தை தூக்கியெறிந்த நேர்மறை உணர்வுகள் சுயம் வெளிப்பட்டது படையெடுத்தன திறமைகள் இளையவளின் அடுக்கடுக்கான விடா முயற்சிகள் களைக்கவில்லை ஆயிரத்தை எட்டிய உயற்சிகள் மலைபோல நம்பிக்கை அரும்பினால் உருவானது நிலைக்கும் மொழியெனவே பரதேசத்திலும் முடிவானது உரையாடலென்ன எழுதுவதென்ன சீதனமானது தாய்மொழி திரைநீக்கி வெளிவந்து அமைத்தாள் தனிவழி கரைதாண்டியே போனது மகளின் அறிவலைகள் தரைமேலே இன்னுமொரு சின்னக் கலைமகள் நாற்றிசையும் புகழதுவும் எட்டியே பரவட்டும் ஆற்றிவிட மொழிப்பணியை வல்லமையும் எட்டட்டும் போற்றிவிடுமளவிற்கு வானமே அண்ணார்ந்து பார்க்கட்டும் ஏற்றுக்கொண்டே சிறுவுலகம் மகிழ்வுதனை சேர்க்கட்டும் ஜெயம் 15-03-2023 https://youtu.be/obHY638WF_w