உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Selvi Nithianandan

Selvi Nithianandan

தரணியில் பெண்கள் உருளும் உலகில் பெண்ணின் பெருமை உயர்வின் பிடியில் மகிழ்வின் சிறப்பு உலகை ஆளும் திடத்தின் வலிமை உவகை கொள்ளும் ஆளுமையாகும் விண்ணிலும் மண்ணிலும் பற்பல சோதனை வியத்தகு பெண்களின் விருட்சமாய் சாதனை தடைகளை உடைத்து நம்பிக்கை கொண்டு தளராத மனத்தால் அதிஉச்சம் கண்டனரே ஆணுக்கு பெண்சரி நிகர் என்றும் அடுக்களை தாண்டி அனிமேசன் வரை அத்தனை துறையும் ஆளுமை ஊன்றி அவனிக்கு கிடைத்த அற்புதச் சான்று பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய் அகப்பை பிடித்த கரம் அன்று நவீனத்தில் மங்கைகள் இன்று உழைப்பிலே உயர்ந்தவளாய் வென்று உலகையும் ஆளுகின்றாள் நன்றே