உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ரஜனி அன்ரன்

ரஜனி அன்ரன்

“ மாதர் மாண்பு “.....கவி....ரஜனி அன்ரன் (B.A) 09.03.2023 மாதவம் செய்திட்ட மாதரை மனுக்குலத்தின் மாணிக்கங்களை வீட்டின் மின்மினிகளை நாட்டின் கலங்கரை விளக்குகளை தியாகத்தின் சிகரங்களை உறுதியின் உன்னதரை உன்னதமாய் மதித்திடுவோம் ! தடைகள் பலதையும் தாண்டி சமூகக் கட்டுக்களை உடைத்து நிதர்சனங்களை நியாயமாக்கி விமர்சனங்களை எதிர்கொண்டு தன்னம்பிக்கையோடு போராடி மென்மைக்குள் மேன்மையாகி மேதினியில் சாதனையே மாதர் மாண்பு ! மாதர் சக்தி மாபெரும் சக்தி மாதர் மாட்சி மண்ணிற்கு எழிற்சி மாதரின்றி மன்னுலகில்லை மாதரின்றி மனுக்குலமில்லை மாதரின்றி எழிலுமில்லையே மாண்புடை மாதரை மகத்துவமாக்கி மாட்சியைப் போற்றுவோம் ! https://www.youtube.com/watch?v=2yPwGpFNG8E