உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ஜெயம் தங்கராஜா

ஜெயம் தங்கராஜா

கவி 643 சிங்கப் பெண்ணிவள் அடுப்பங்கரையே கதியென இருந்ததெல்லாம் அப்போது அடுத்தடுத்து சாதனையாய் படைக்கின்றாள் இப்போது தடுத்துவிடும் தடைகளினை முட்டி சிதறடித்துக்கொண்டு எடுத்துக்காட்டாக விளங்குகின்றாள் பாரதியின் புதுமைப்பெண்ணாகவின்று மூன்றுநாள் இயற்கையின் கொடுமை முடக்கிவிடவில்லை மூன்று முடிச்சும் அடிமையாய் அடக்கிவிடவில்லை ஆண்களைப் போலவே அனைத்துத் துறைகளிலும் வான்வரை எட்டி படைக்கின்றாள் சாதனைகள் போராடிய காலம் உரிமைக்காக அந்தக்காலம் பாராளும் கோலம் இன்றைய புதியகோலம் ஊரே இவளோடு ஒதுங்காது ஒத்தோடிக்கொண்டது யாரோ இவளில்லையென அவளாளுமையைக் கொண்டாடியது பேதையென எழுதிய கவிஞர்களே மாறுங்கள் மேதையான சமகால முகவரியைக் கூறுங்கள் பாதைமாறிய பயணமல்ல மாற்றிய பயணம் வாதையாயிரம் வரினும் சாதித்தே முடிப்பாள் விதியொன்றை புதிதாக அவளே எழுதினாள் மதியாதோர் தமையிங்கு மதியற்றோர் எனக்கண்டாள் புதியதோர் உலகினை பெருமையுடன் உருவாக்கினாள் பதிவுசெய்தே வெற்றிகளை வலம்வருகின்றாள் சிங்கப்பெண்ணாக ஜெயம் 08-03-2023 https://youtu.be/dIS-15Qr0ng