உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

pon.tharma

pon.tharma

வணக்கம் வியாழன் கவி இலக்கம் -536-07.03.23 வாழ்ந்த நம் சுவடுகள் . ----------------------------------- அழகான வீடு ,அதன் ஓரம் கூடு . அண்ணாந்து சுற்றிப் பார்த்தால் ,அதன் கூரை ஓடு . அழகான குடும்பமொன்று ,அதிலும் பலபேரு . ஆண்களுக்குள் போட்டி வந்தால் ,அப்ப அப்ப ,தகராறு . நடுத்தரக் குடும்பமென்றால் ,உருப்பட வேண்டுமெல்லோ . படித்த (நாம் )புத்தகமும் ,பங்காளிக்கே சொந்தமெல்லோ . ஊரு உபாத்திமாரும் ,ஊக்கத்துக்காய் ,ஒத்து ஊதல் . பேரு வாங்க வைக்க ,பெரும் தடியால் ,சாத்து வேண்டல் . ஆடு ,மாடு ,கோழி என்று ,அவை வளர்த்த பாணிகளும். கூடிநின்று கூட்டாளிகள் ,பந்தடித்த காணிகளும் . பதவி வகித்த ,பாடசாலைப் ,பசுமையான நினைவுகளும் . பள்ளம் ,திட்டி ,(வாழ்க்கை ) ஏறி வந்து ,பரணில் ஏறி அமர்ந்ததுவும் . வாழ்ந்த ....நம் .....சுவடுகள் ....... நாலு பணம் சேர்க்க முன்பே ,காலுக்குமே வந்த கட்டு . நாணயத்தைப் பிடித்துத் தந்து ,ஓடச்சொல்லி ஒரு தட்டு ( காலில் ) . வாழ்ந்த .........நம் ........சுவடுகள் ,,, பொன்.தர்மா