உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

pon.tharma

pon.tharma

வணக்கம் . இது வியாழன் கவி இலக்கம் -535-28.02.23 நிமிர்வின் சுவடுகள் . ---------------------------------- நிமிர்வின் சுவடுகள் ,கூற , மறுக்குமா உதடுகள் . அன்னையும் ,தந்தையும் ,ஆசானும் (எமை ) அகிலத்துக்கு அனுப்பிய ,பரம்பொருளும் . ஆக்கமும் ,ஊக்கமும் ,எமக்கு அளித்து - அனுதினம் அவஸ்தைகள் ,சிதறடித்து . ஏழ்மையும் ,தாழ்மையும் ,மறக்க வைத்தார் . ஏறிடும் ஏணியாய்த் ,தாமிருந்தார் . அயர்ந்திடும் போதினில் ,அடித்துறுக்கி . தொய்ந்திடும் வேளையில் ,காதில் முறுக்கி . புதைந்திட்ட திறமைகட்கு ,பொடிவைத்து . துறை எல்லாம் ,தூண்ஆக்கி ,நிற்கவைத்த . ஒளி காட்டி உயர்த்தி வைத்த ,கண்மணிகள் .(அவை ) கரையில்லா ,வானத்தின் ,மின்மினிகள் . ஆக்கம் பொன்.தர்மா