உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ஜெயம் தங்கராஜா

ஜெயம் தங்கராஜா

kavi 641 மொழியின்றி வாழ்வில்லை ஜெகமெங்கினும் தாய்மொழி நாள் கொண்டாட்டம் அகத்தியன் கண்ட மொழியிங்கு அமுதாட்டம் அகரத்தில் தொடங்கி முடிகின்றவரையில் சுகமூட்டும் சிகரத்தையடைய கூடவே இருந்து வழிகாட்டும் சொற்களின் சாலம் மயங்கவே வைக்கும் கற்கண்டாய் இனிக்கும் கேட்டாலே காதோரம் பற்பல மொழிகளும் அகிலத்தில் இருக்கலாம் நற்றமிழ் போல இனிமையைத் தருமோ பெற்றோர்கள் காட்டி வரவான மொழி கற்றிடக் கற்றிட தரமாக்கும் மொழி வற்றாது வழங்கும் கொடையான ஜீவநதி இற்றைவரைக்கும் கொண்ட வாழ்க்கையின் விதி எங்கு சென்றாலும் நிழலாகத் தொடருமே அங்கும் என் சுவாசத்தை நிரப்புமே மங்காத ஞானத்தை ஆயுளுக்கும் கொடுக்குமே பங்கெடுத்து வாழ்க்கையில் என்றுமெனை ஆளுமே பெயர்தந்து பெருமைதந்த அருமையினை மறப்பேனா அயல்மொழியை உயிர்மொழிக்குள் நுழையவுந்தான் விடுவேனா உயர்வானதே நம்மொழி சூரியனாய் உதிக்கும் தயக்கமில்லை தலைமுறைகள் சிந்தைதனில் பாதிக்கும் அழகான தாய்மொழியை பெற்றதனால் மகிழ்ச்சியே பழகிவிட பழகிவிட புத்தியிலும் வளர்ச்சியே அளப்பெரிய பாக்கியமே தமிழினத்தில் பிறந்தது உளம்நிறைந்த வாழ்க்கைக்கு செம்மொழியே சிறந்தது இதுவரைக்கும் வழிநடத்தி சென்றாயம்மா நன்றி அதுவரைக்கும் பாடிடுவேன் என்றுமுனை போற்றி முதுமையிலும் முதுமொழியே பசியதனை தீர்க்கும் புதுமைகளின் நாயகியே பூவுலகில் வாழிநீவாழி ஜெயம் 22-03-2023 https://youtu.be/i6DI-y_p4gE