உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ரஜனி அன்ரன்

ரஜனி அன்ரன்

“ சுதந்திரமாமே “....கவி...ரஜனி அன்ரன் (B.A) 02.02.2023 சுதந்திர இலங்கையில் சுதந்திரமாம் சொல்லி மகிழுது அரசும் மெல்ல முடியாமற் தவிக்குது எம்மினமும் சடுதியாக ஏறிவிட்ட விலைவாசி ஒருவேளை உணவிற்கே திண்டாட்டம் இந்தநிலையில் யாருக்கு சுதந்திரமாம் ? நசுக்கப்பட்டவர்களின் ஏக்கமும் பொசுக்கப்பட்ட உணர்வுகளும் கட்டாயத் திணிப்புக்களும் ஆதிக்ககாரரின் அடக்குமுறைகளும் வல்லாதிக்கத்தினரின் வன்முறைகளும் தகர்க்கப்படும் நாளே சுதந்திர நாளாம் அதுவரை இல்லை சுதந்திரம் நமக்கு ! காணாமல் ஆக்கப்பட்டோர்க்கு இன்றுவரை விடையில்லை சிறையில் வாடுவோர்க்கு விசாரணையுமில்லை விடுதலையுமில்லை இந்த நிலையில் யாருக்குச் சுதந்திரம் ? பேதங்கள் ஒழிந்து பிரிவினைகள் அகன்று நியாயங்கள் வென்று சமத்துவம் மிளிரும்நாளே யாவர்க்கும் பூரண சுதந்திரமாம் அதுவரை இல்லை நமக்குச் சுதந்திரம் ! https://www.youtube.com/watch?v=57uEs9kzcLs