உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ரஜனி அன்ரன்

ரஜனி அன்ரன்

“பெருகிடும் வலிமை பெற்றுயரத் தடையேது?..ரஜனி அன்ரன் (B.A)19.01.2023 அறிவின் தேடலை ஆற்றலின் முனைப்பினை இயல்பின் உந்தலை ஈகையின் பெருமையை நம்பிக்கை உணர்வினை நாளைய கனவினை நமதாக்கிட வலிமையைத் துடுப்பாக்கி பெருகிடும் ஆண்டினைப் பெருமையாக்கி மெருகூட்டுவோம் வலிமை கொண்டு ! ஆற்றல் பெருக ஆளுமை மிளிர போற்றலும் புரிதலும் துணையாகிட வளம் பெருகிட வல்லமை ஓங்கிட வலிமையோடு வாழ்வும் நகர்ந்திட படைப்புக்களும் பல்கிப் பெருகிட தங்கு தடையின்றிப் பொங்கிப் பெருகட்டும் வலிமை ! தரணியில் தடம் பதிக்க தடைகள் என்று இங்கு எதுவுமில்லை தடையினை உடைத்து முனைப்போடு உயர நீடு புகழினை நேர்த்தியாக்கிட வாழ்வினை மெருகிட வளமினை உரமிட பெருகட்டும் எங்கும் வலிமை ! https://www.youtube.com/watch?v=BqJMrXk7oE4