உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ரஜனி அன்ரன்

ரஜனி அன்ரன்

“ விழிப்புணர்வு “...கவி...ரஜனி அன்ரன் (B.A) 01.12.2022 ஆரோக்கியம் மனித உரிமை ஆயுளுக்கு வலு ஆரோக்கிய வாழ்வே விழிப்போடு வாழ்ந்திட விழிப்புணர்வு தேவை விந்தை உலகுதனில் விசித்திர நோய்கள் மனித சமூகத்திற்கு சவாலாகிட கொடிய நோய்களும் விடாமல் தாக்க அச்சுறுத்தலாகுது உலகில் எயிட்சும் ! உயிர்கொல்லியாகி உயிரை எடுக்குது சிகிச்சையும் பலனின்றி உயிர்களும் மடியுது விழிப்புணர்வைக் கொடுக்க வழி சமைத்தது ஐ.நா.மன்றும் டிசம்பர் முதலாம்நாளை உலக எயிட்ஸ் தினமாக ! வரைமுறையற்ற உறவுகளும் போதைவஸ்த்து ஊசிப் பயன்பாடுகளும் கொடிய நோய்க்கு காரணமாக காவுகொள்ளுதே மனித உயிர்களை அழகான வாழ்வினை ஆள்கொல்லிக்கு தாரை வார்க்காது விழிப்புணர்வோடு செயற்பட்டால் ஆரோக்கியமாகுமே வாழ்வு ! https://www.youtube.com/watch?v=fGi0MxaARJE