உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ஜெயம் தங்கராஜா

ஜெயம் தங்கராஜா

கவி 632 நட்பாக வாழ்க்கை காலம் என்பின்னால் வருகின்றது நாளும் நினைத்ததை தருகின்றது வாழும் வாழ்க்கையும் சுவைக்கின்றது நீளும் உறவுகளாய் அமைகின்றது அழகான நினைவுகளாய் உள்ளத்தில் பொழுதைப்போக்கவரும் சுகங்களெல்லாம் இல்லத்தில் வழுக்கியே விழவில்லை பள்ளத்தில் அளவில்லா ஆனந்த வெள்ளத்தில் பாதைகள் புதிதாகக் கிடக்கின்றன பாதங்கள் பயணித்தே கடக்கின்றன சாதகமாகவே விஷயங்கள் கிடைக்கின்றன சாதிக்கச்சொல்லி வாய்ப்பினைப் படைக்கின்றன சிரிப்பு ஒன்றே போதும் சிறுசிறு சந்தோஷங்கள் ஊறும் விரும்பியே அனுபவிக்கின்ற வாழ்க்கை இருப்பிற்குள் நிம்மதி சூழ்கை கடினம் என்பதும் இலகுவாக படித்த அனுபவங்கள் பழக்கமாக புரிந்து கொள்ளக்கொள்ள நன்மையே பிடிக்கும் வாழ்வாகும் உண்மையே சூழ்நிலை மாறும் மாறாது வாழ்நிலை சோகத்தைக் கூறாது நாளுக்குள் நம்பிக்கை குலையாது தோல்விகள் நிழலுக்கும் நிகழாது ஜெயம் 30-11-2022 https://youtu.be/HB5VTHR_vG4