உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ஜெயம் தங்கராஜா

ஜெயம் தங்கராஜா

கவி 631 எமக்காக தம் வாழ்க்கையை தந்தவருக்காய் குழிகளிற்குள் விதைக்கப்பட்ட எம்மினக் காவலரை இருகரங்கூப்பி நன்றிதனை தெரிவிக்கும் நேரமிது அழிந்தது மறவர்களின் உடல் மட்டுந்தான் அவர்கொண்ட கனவு நனவாகும்நாள் வெகுதூரத்திலில்லை மொழிக்காக தமக்குத்தாமே முடிவுரை எழுதியவர்கள் விழிநீரை காணிக்கையாக்குகின்றோம் எம்குல சாமிகளே மரணத்தை சந்தித்தே இனத்தைக் காத்தீர்கள் ஆவியதை எதிரியுடன் களங்கண்டு துறந்தீர்கள் கூலிப் படையணிகள் அஞ்சி நடுங்கியதே சாவில்கூட வெற்றிகளை குவித்தே சரிந்தீரே சரித்திர நாயகர்களாக இன்றும் வலம்வந்தீர் காவியத்தில் உங்கள் பெயர்கள் உச்சரிக்கப்படும் காவியதை கொண்டுசெல்லும் அடுத்த தலைமுறை தூவி காந்தள் மலர்களை அர்ச்சித்து நமக்காக உயிர்நீர்த்த தியாகங்களை வழிபடுவோம் கார்த்திகை ஈழவர்க்கு உயிரோரொட்டிய புனிதமாதம் வானமுடையினும் பூமி பிளப்பினும் நிலைக்குமது ஊர்திரண்டே மாவீரர் நாளமதை அனுசரிக்கும் விழிசொரியும் உறவுகளின் உள்ளக்குமுறலால் விளங்கும் பார் அதனின் திசையெட்டும் பார்க்கின்றது அறம் கொண்டவர் தமிழரென முணுமுணுக்கின்றது தீர்வு ஒன்று வெகுவிரைவில் வந்துவிடும் புனிதர்களின் கனவுத்தேசம் இறுதியிலே தோன்றிவிடும் கோயில்கள் எல்லாம் மாவீரர் சிலைகள் நிரம்பட்டும் தாய்நிலத்தின் புதிதான தெய்வங்களாயவர்கள் ஆகட்டும் பேயிலும் கொடியவரான துரோகிகள் உணரட்டும் தாயகத்தை நெஞ்சில்வைத்து பூசிப்போரை அறியட்டும் தாயின் வயிற்றில் கருத்தரித்த முதற்கொண்டே மூச்சை தமிழாய் சுவாசித்த சிசுக்களவர் தீயில் தீர்ந்தவரை மனதார வாழ்த்துரைத்து எம் குலவிளக்குகலின் மரியாதையை தொடர்ந்திடுவோம் https://youtu.be/SB6WmGHQuc8 ஜெயம் 23-11-2022