உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Jeya Nadesan

Jeya Nadesan

கவிதை நேரம்-24.11.2022 கவி இலக்கம்-1602 தலை சாய்ப்போம் மனிதம் நிமிர வாழ்ந்தோருக்காய் ஈழத்தமிழ்த் தாயின் கண்ணீரையும் விடியலின் முகவரிக்காயும் காவியங்கள் பல படைத்து நின்று குருதியில் நனைந்த மைந்தர்கள் கண்ணென காத்த மண்ணுக்காய் மனித இனம் வாழ விடுதலுக்காய் விடுதலை வாசம் தேடி ஓடிய கால்கள் இலட்சியப் பாதை வழி சென்று பயணத்தை தொடர்ந்த வீரர்கள் நீராடும் விழிகளில் நினைவுகளாக வராறு படைத்து விட்டு சென்ற மகான்கள் இறப்பிலும் நினைவில் வாழும் தியாகிகள் வாழ்ந்து மடிந்து புதையுண்டவர்கள் கனத்த இதயத்துடனும் மாறா வலியுடனும் நாமும் நினைவு கூர்ந்து தலை சாய்த்து வணங்குவோம்்