உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ரஜனி அன்ரன்

ரஜனி அன்ரன்

“ உச்சம் தொட்ட மக்கள்தொகை “கவி....ரஜனி அன்ரன் (B.A) 17.11.2022 உச்சம் தொட்ட மக்கள்தொகை அச்சம் கொள்ள வைக்குதே உலகை எண்ணூறு கோடியினை எட்டித்தான் விட்டது இதில் சீனாவும் இந்தியாவும் முந்தித்தான் கொண்டது பூமிப்பந்து தாங்குமா பூதாகரம் தான் வெடிக்குமா ! மருத்துவம் தொழில்நுட்பம் சுகாதாரம் விழிப்புணர்வு ஆரோக்கிய வாழ்வு ஆயுட்கால நீடிப்பால் மின்னல் வேகத்தில் குடித்தொகைப் பெருக்கம் மனித அபிவிருத்தியில் மைல்கல்லாகி உச்சம் தொட்டதே எண்ணூறு கோடியினை ! பெருகிவரும் மக்கள் பெருக்கம் அருகி விடுமே நீர்நிலவள பற்றாக்குறை உருகி விடுமே பனிப்பாறைகளும் காடுகளை வளர்த்து களனிகளைப் பேணி நெகிழியை விடுத்து நீரினைச் சேமித்தால் நிலமும் செழிக்கும் நிம்மதியும் கிடைக்கும் எதிர்கால சந்ததிக்கும் அனுகூலமாகுமே !