உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

13.10.22 வியாழன் கவிதை ஆக்கம் 247 வாழ்ந்தென்ன இலாபம் தனியாகப் பேசிடும் மாந்தர் துணையின்றியே மனிதனாகப் பிறந்து மிருகமாய் வளர்ந்து சிதைத்திடும் வதை முகாமின்றியே வாழுமிந்த உலகில் வந்தவர் தந்ததெல்லாம் இன்பமதைவிட துன்பமன்றோ ஏனிந்தப் பிறப்பு எத்தனை கோடி அழுகுரல் சிந்திக்கத் தெரியாதவர்க்கு சீற்றம் எதற்கு திருந்தாத உள்ளம் இருந்தென்ன இலாபம் பொருந்தாத பிள்ளைகள் பிறந்தும் வேதனையன்றோ பணத்தில் சோதனை பிணத்தில் சாதனை கணத்தில் பிரிவு குணத்தில் நெரிவு பெற்றோர் வயது முதிர்ந்தால் சிறைக்கூடத்திலே பிள்ளை வயது வந்தால் அறைமாடத்திலே கணவன் மனைவி ஒருவர் இறந்தால் மற்றவர் யாருமின்றி தனியே வாடி ஒருபிடி சாம்பலாவதில் வாழ்ந்தென்ன இலாபமன்றோ