உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Jeya Nadesan

Jeya Nadesan

கவிதை நேரம்-15.09.2022 கவி இலக்கம்-1674 மனித நேயம் அலைபாயும் உலகினிலே நிலையானது எதுவுமில்லை அன்பென்ற சொல்லிற்கு அர்த்தமும் ஏதும் இல்லை அவலை நிலையிலா இல்லமும் இல்லை அமைதியிலே வாழும் உள்ளமும் இல்லை மாண்புடைய மனிதன் இன்று மனித நேயம் மறந்து மத வெறியும் கதிராக உதித்த பெண் குழந்தைகள் பாதுகாப்பின்றி பாலியல் படுகொலைகள் ஆதரவின்றி அவதியுறும் உள்ளங்கள் மது குடி போதை வஸ்து வன்முறைகள் மாசு படிந்த மனங்கள் மண்ணில் நிறைந்திட மனித நேயம் படைத்த மனிதம் எங்கே அனாதைகள் பெண்கள் அகதிகள் என்றும் முடங்கியது எம் மக்களின் வாழ்வு உதவும் கரங்கள் இங்கு இருக்கும் வரை மனித நேயம் சிறப்பு பெற உதவிடுவோம் மனித மாண்பு மலர்ந்திட வாழ்ந்திடுவோம்