உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ரஜனி அன்ரன்

ரஜனி அன்ரன்

“ உழைப்பின் உன்னதர்கள் “....கவி....ரஜனி அன்ரன் (B.A) 05.05.2022 உலகையே தோள்களில் சுமந்து உழைப்பினை உரமாக்கி உண்ண உடுக்க உறங்க உன்னதமாய் நாம் வாழ ஆலைகளில் தொழிற்சாலைகளில் வீதிச்சாலைகளில் சாக்கடைகளில் ஆழக்கடலில் சேற்று வயல்களில் சுரங்கங்களிலென உழைக்கும் உழைப்பாளிகள் என்றும் உன்னதர்களே ! உழைக்கும் உன்னதர்களை மேன்மைப்படுத்தும் மே மாதமே மேதினியில் பூத்து மேன்மை பெறுகிறாய் நீயும் இரும்பாக தமை வருத்தி கரும்பாக நாம்வாழ உரமோடு உழைக்கும் உழைப்பாளிகளே உலகினைத் தாங்கும் உன்னதர்கள் ! உழைப்பாளிகளின் கடின உழைப்பில் உருவானதே இவ்வுலக அதிசயங்கள் உலகம் இயங்க உயிர்கள் வாழ உன்னத உழைப்பாளிகளின் உழைப்பு அவசியமே வியர்வை சிந்தும் கரங்கள் உயரட்டும் கடின உழைப்பினால் உலகை ஆழட்டும் !