உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ரஜனி அன்ரன்

ரஜனி அன்ரன்

“ வெம்மையின் கொடுமை “ கவி....ரஜனி அன்ரன் (B.A) 21.07.2022 கோடையின் வெம்மை இங்கு சோடை போக வைக்குது எமை வாட்டி எடுக்குது வதையும் செய்யுது வரலாறு காணாத அனலையும் கக்குது அனல் காற்று வீசி பசுமையைத் தின்னுது ஐரோப்பிய நாடுகளையும் அவலமாக்குது வெம்மையின் கொடுமை வேதனை தருகுது ! உச்சி வெய்யில் சுட்டெரிக்க குச்சி ஐஸ்சைத் தேடுது நாவும் உச்சந்தலையும் விறைத்துவிட உக்கிரமாய் எரிக்கிறான் உதயசூரியனும் வியர்வைத் துளிகள் முத்துமுத்தாய் கொட்ட விபரிக்க முடியாத புழுக்கம் வீட்டுக்குள்ளே மக்களும் முடக்கம் வெம்மையின் கொடுமை தாங்க முடியல ! அனல் வெப்பத்தில் பொசுங்குது பயிர்களும் பட்சிகளும் ஒதுங்குது நிழல்களைத் தேடி மக்களும் ஆற்றங்கரைகளை நோக்கி விரைந்தபடி வெய்யில் காலத்து விடுமுறை வியர்வையில் தோய்ந்தபடி விரயமாக தருக்களும் இங்கு அசையாதபடி மெளன அஞ்சலி செய்யுதே !