உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ரஜனி அன்ரன்

ரஜனி அன்ரன்

“ அன்றிட்ட தீ “....நிழலாடும் நினைவுகள்...கவி....ரஜனி அன்ரன் (B.A) 09.06.2022 குன்றின் தீபத்தை குடாநாட்டின் கலசத்தை கலாச்சாரத்தின் சின்னத்தை கலங்கரை விளக்கை அறிவின் பொக்கிஷத்தை அனலுக்குள் பொசுக்கி அழித்தாரே நீசர்கள் ஆண்டுகள் நாற்பதும் கடந்ததே அன்றிட்ட தீ இன்று வரை நிழலாடும் நினைவுகளே ! நூலக எரிப்பு நுண்மையின் அழிப்பு தேடற்கரிய தேட்டங்கள் இழப்பு அறிவின் அற்புதம் உறைந்த இடம் ஆயிரமாயிரம் மேதைகள் உருவான தளம் ஆசான்கள் காட்டிய வழித்தடம் அறிவுப் பசி தீர்த்த அமுதகூடம் அன்றிட்ட தீயில் பொசுங்கிய போதும் - இன்று அதேயிடத்தில் பூத்துக் குலுங்குது புதுப்பொலிவோடு ! காலத்தின் விரைவில் கடுகதி உலகில் கணணி யுகத்தில் தொழில்நுட்ப வேகத்தில் அறிவின் வளர்ச்சியோ அசுர வேகத்தில் கையுக்குள்ளே உலகம், விரலுக்குள்ளே வித்தகம் நூலகத்தை நாட வேண்டிய தேவையுமில்லை தட்டி விட்டால் வருகிறது தகவல்கள் - இப்போ நூலகங்கள் கணணிக்குள் கைத்தொலைபேசிக்குள் அடக்கம் ஆனாலும் அன்றிட்ட தீ இன்றுவரை நிழலாடும் நினைவுகளே !