உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ஜெயம் தங்கராஜா

ஜெயம் தங்கராஜா

கவி 608 வாழ்வு மாயமே மண்ணுடன் உடல் உறவை முடிக்கும் உடலுடன் உயிர் உறவை முடிக்கும் காலன் இரசிக்காத புவியின் வசிப்பு கோலம் ஆடிய ஆட்டத்திற்கோர் முடிவு இந்த வையகத்தில் எதற்காகப் பிறப்பு கற்பூர பொம்மையாய் உருவத்தின் இருப்பு பூமியே காலடிக்குள் கிடப்பதாக முன்னுரை பூலோகத்தின் அடியில் புதைவதாய் முடிவுரை மூச்சு ஒருநாளில் நின்றே போகும் பேசிய வார்த்தைகள் அடங்கியே போகும் அழகான தேகம் அழுகியே போகும் அன்றாட வாழ்வு காணாமற் போகும் சீவன் தங்காத தற்காலிக சீவியம் சுவாசமும் தேய்ந்து காணாது அமாவாசையாகும் அழைப்பு மணியடித்தால் கதவைத் திறக்கவேண்டும் பூவை பறித்திடுவான் தோட்டக்காரன் உரிமையோடு கொண்டு வருவதுமில்லை கொண்டு போவதுமில்லை ஓடிவிட மூச்சும் எட்டுக்காலில் பயணம் சொத்தெங்கே சுகமெங்கே போகுமிடம் தானெங்கே மானிட வேடமதைக் களைக்கும்நாள் வருமிங்கே வாழ்க்கையெனும் நாடகத்தை அரங்கேற்றிய மேடையதை விடைபெற்று போய்விடவே முற்றுப்பெறும் பயனமங்கே தாமரை மேலே நீர்த்துளி போல உள்ளநிலை மாட்டாமல் எவருமே தப்பார் விதியின்வலை ஜெயம் 25-05-2022