உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

அபிராமி கவிதாசன்.

அபிராமி கவிதாசன்.

கவிஇலக்கம்- 170 / விருப்பு தலைப்பு ! 20.04.2022 “ எதிர்காலம் இருளானதோ “ நான்சென்று வாழ்வேன் நலமாக என்றேன் ஏன்விடிய இல்லை எதிர்காலம் இருளானதோ / நாளை மலரும் நமது நாடென வேளையின் வேதனை விடியாது போனதோ / மாண்ட உயிருக்கு மரியாதை செய்திட ஆண்ட தமிழனாய் அனுகிட அருகில்லை / தாய்மண் வாசம் தமிழரின் பாசம் வாய்மொழி சிந்துதமிழ் வரலாறு பேசும் / தாய்வீட்டு மகழ்வீந்த தாய்மண்ணே வணக்கம் சேய்வந்து வாழ்ந்திட சேர்ந்திடும் இனக்கம் / என்ஈழ தேசமோ என்றும்என் நேசமே அன்றலர் மலராய் அன்னைமடி மலர்வேனோ / புதிரான சதிகாரர் போராட்ட விதியாலே எதிர்காலம் இருளாகி ஏற்றத்தை இழந்ததோ / நன்றி 🙏