உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Jeya Nadesan

Jeya Nadesan

கவிதை நேரம்-14.04.2022 கவி இலக்கம்-1493 அழகிய மலர்களின் வனப்பினிலே -------------------------------------------- இறைவன் படைப்பில் அழகிய மலர்கள் அன்னையர்கள் உதிரத்தின் பிறப்புக்கள் உலகிற்கு ஒளிர் மயமான குழந்தைகள் பாமுகத்தில் பல வர்ண உதயங்கள் பெற்றோர்கள் பெற்றிட்ட சுமைகள் கற்றிட்ட கல்வி உயர்வில் திறமைகள் பெற்றிட்ட சந்தோச அழகிய முகங்கள் வளர்ந்திட்ட பிள்ளைகள் ஆளுமைகள் நாளுக்கு நாள் முன்னேற்ற பாதை சிறப்புகள் சிந்தனை ஞாபக வளர்ச்சி பெருமைகள் பாடல்,இசைக்கருவி,பயணங்கள்,சந்திப்புகள் பாடல்கள்,பாடுவதின் சொற் கோர்வைகள் அமைதியாக பாடி குதூகலிக்கும் சந்தோசங்கள் கல கலப்பு சிரிப்பில் மகிழும் தருணங்கள் நாமும் பெற்றோர்,உறவுகள் உட்பட மகிழ்வோமே