உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

இரா விஜயகௌரி

இரா விஜயகௌரி

மௌனம் பெரு மரணம் ஓடி ஓடிக் கொண்டிருக்கும் உலகு நிழல் தேடி தேடிச் சென்றிருக்கும் உறவு உயிரப்பின் வருடல்களால் உருவாகும் கணங்கள் அவை உயிர்த் துடிப்பை இழப்பின்அங்கு மரணம் நீத்தார் மட்டுமல்ல இறந்தோர் செயலிழந்த மாந்தர்களும்ஜடங்கள் செறிவிழந்த வாழ்வுமது. சருகே இழைவெழுத மறந்தோரும் பிணம்தான் கணங்களுடன் போராடும் உலகில் தனித்திருந்து வாழ்கணங்கள் கொடுமை இயல்பிலிதை உணர்பவர்கள் சிலரே உரைப்பதற்கு மொழியிங்கே கதறும் மௌனமிது மூச்சடைத்து உழல உயிருடலும். ஜடமாகி. முடங்கும் கனக்கின்ற நொடிகளெலாம். கலங்கும் உயிர்ப்பெழுதா நொடிகள் தமை உடைப்போம் நம்கைகள்தாம் எமக்கு பலமே நம்கால்கள் நிலைத்தெழுத. உழைப்போம் மரணத்தால் மரணிக்கா வாழ்வை மௌனத்தை. உடைத்தெறிந்து படைப்போம்