உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ரஜனி அன்ரன்

ரஜனி அன்ரன்

“ துளிநீர் “ கவி......ரஜனி அன்ரன் (B.A) 24.03.2022 நீலவானத் திரை விலத்தி வான்மகளை முத்தமிட்டு வானம் விட்டு மெல்லக் கீழிறங்கி கதிரவன் ஒளியில் கண்சிமிட்டி கடலலையில் மோதித் தெறித்து காற்றின் வேகத்தில் திவலையாய் சிதறி துளித்துளியாய் நிலத்தில் விழுமே மழைத்துளி ! அண்டத்தை எழுபது வீதத்தில் ஆட்சி செய்து கண்டங்கள் எல்லாம் நிறைந்து அகிலத்தை அசைத்தும் இசைத்தும் நின்று துளிநீராய் மண்ணில் விழுந்து பெருவெள்ளமாகி ஏரி குளங்களை நிறைத்து வனப்பாக்குமே துளிநீரையும் வீணாக்காது மழைநீரைச் சேமித்து புவித்தாய்க்கு வளம் சேர்ப்போம் ! வேளாண்மை செழிக்க விளைச்சல் பெருக வழி காட்டுமே துளி நீர்ப்பாசனம் இன்றும் உலகின் கடைக் கோடிகளில் துளிநீரின்றி குடிநீருக்காக மக்கள் தவிப்பு விழிநீர் துடைக்கும் துளிநீர்த் திவலையே நீ இல்வையேல் நாம் இல்லையே இன்னுயிர் காக்கும் உயிராயுதம் நீயே !