உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ஜெயம் தங்கராஜா

ஜெயம் தங்கராஜா

கவி 598 பெண்ணில்லா மண்ணா இறைவனை போன்றதொரு உண்மை குறையில்லா நிறைவதன் தன்மை பூத்திடும் பூக்களின் மென்மை காத்திடும் உன்னதம் பெண்மை பிறந்திட்ட பிறப்பதில் பரிபூரணம் சிறந்தநல் வாழ்க்கைக்கு காரணம் அன்பிற்கும் பரிவிற்கும் ஓரினம் பெண்ணே உயர்வான உயிரினம் பொன்னென்றும் பூவென்றும் அழைப்பார் கண்ணென்றும் கவிக்குள்ளே நுழைப்பார் எண்ணில்லா கவிஞரும் பிழைப்பார் எண்ணங்கள் மோதியே களைப்பார் படைப்புக்களில் பெண் விசித்திரம் நடமாடும் படிக்கவேண்டிய சரித்திரம் உயிர்களெல்லாம் அவளிடம் தஞ்சம் உயர்வானதென்றும் பதுமையர் நெஞ்சம் ஜெயம் 16-03-2022