உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

பொன்.தர்மா

பொன்.தர்மா

வணக்கம் இது வியாழன் கவிதை நேரம். இல.521 *** விடியலின் உன்னதம்*** வெள்ளந்திப் பொழுது வெள்ளாப்பிலே,ஜனனம். வெளிச்சத்தை விழுங்கிய, இருளோ , அவலமாக மரணம். காலைக் குருவிகளோ, கீச்சு , மாச்சு என்று கல கலத்துச், சத்தம். மாலையாவதற்குள்,மறுபடியும் வயிறு நிரப்பவென , ஓட்டம். அயர்ந்திட்ட கண்களோ, இமை வெட்ட மறுக்குது. இறுகப் பிடித்த போர்வையோ, நழுவிப் போகத் தடுக்குது. அன்றாடும் உழைப்பாளிக்கோ,அடுத்த நேரத்தை எண்ணி எண்ணித்,தலைச்சுற்று. வண்டாட்டம் ,பறப்பவர்க்கோ ,வறுக வேண்டுமென்று , பெரும் பித்து. தெண்டாட்டம் களையவே, தினம் , தினம்,தோன்றி மறையும் விடியல். வெள்ளாப்பும் , வெகு இருளும், வகுப்பதே , விடியலின் உன்னதம் . பொன்.தர்மா