உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ரஜனி அன்ரன்

ரஜனி அன்ரன்

“ உருமாறும் புதிய கோலங்கள் “ ........கவி....ரஜனி அன்ரன் (B.A) 17.02.2022 வாழ்வியலின் வண்ணத்தை வாழுகின்ற வாழ்வினை புரட்டிப் போட்டது கொரோனா அமைதி இழந்தது மனங்கள் ஆற்ற முடியாத் துயரங்கள் கோலங்கள் மாறி அலங்கோலமானது வாழ்வு ! முடக்கங்களும் கட்டுப்பாடுகளும் முடக்கிப் போட்டது வாழ்வை கட்டுக்குள் வரவில்லை கொரோனாவும் உருமாறுது வைரஸ்சும் உருவாகுதே புதிய கோலங்களும் ! உருமாறும் வைரஸ் ஒருபக்கம் உக்ரைனுக்கும் ரஸ்சியாவிற்கும் உக்கிரபோர் வெடிக்கும் அபாயம் மறுபக்கம் உலக நாடுகளும் இப்போ பதற்றம் உக்கிரைனுக்கு உதவ நாடுகள் பலவும் முண்டியடிப்பு ! எல்லைகளில் படைகளும் குவிப்பு எரிவாயுவிற்கும் எண்ணைக்கும் தட்டுப்பாடு எளிதில் வந்திடுமோவெனவும் அங்கலாய்ப்பு ஐரோப்பிய எல்லை நாடுகளும் அச்சத்தில் உறைவு உருமாறும் புதியகோலங்கள் உருவாக்குமா அமைதியை ?