உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

jeyam

jeyam

கவி 594 காதல் செய்யும் உலகம் வெறும் வார்த்தைகளால் வர்ணித்துவிட முடியாததொன்று இரு இதயங்களை ஒன்றாக்கும் அற்புத உணர்வது காதலியின் வனப்பை காதலன் விழிகளால் பருகுவான் காதலன் நிழலையும் காதலி சொந்தங்கொண்டாடுவாள் ஒருவருக்குள் ஒருவர் தொலையும் அற்புதமும் ஒரு மூச்சில் இருவர் வாழும் அதிசயமும் இருவேறு ஜீவன் ஒரேபாடல் பாடும் புதுமையும் இந்த காதலர் உலகில் மட்டுமே நிகழும் இன்பமான இம்சைகள் சுகமான தீண்டல்கள் பார்த்துவிட்டால் உள்ளத்துள்ளே துடிப்புகள் பார்க்காவிட்டால் இனம்புரியாத தவிப்புக்கள் சுகமான வலிகளே இந்தக் காதல் வந்தாலே விரும்பியே சிறைப்படும் ஒரு இயற்கை நிகழ்வு ஒருவரைத் தவிர்த்து ஒருவரில்லை உறவின் கலப்பு உளறிடும் வார்த்தைகள் கூட இரசித்திட வைக்கும் சொப்பனங்கள் இரவைத்தாண்டி பகலுக்குள்ளும் தொடரும் ஒருவருக்கொருவரை அப்படிப் பிடிக்கும் இருவரின் அன்பினை வாழ்க்கையும் படிக்கும் அள்ள அள்ள குறையாது காதலுணர்வது பெருகும் காதலின் காலம் வரையும், மகிழ்ச்சியின் கோலம் எங்கோ பிறந்தோரை ஒன்றாக இணைப்பதும் பேசிடும் நிமிடங்கள் பொன்னாகிப் போவதும் சாதி மதம் மொழியினைத்தாண்டிய ஈர்ப்பதும் இந்த பருவங்கள் பூத்திடும் தேசத்தில் தான் 09-02-2022 ஜெயம்