உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

பொன்.தர்மா

பொன்.தர்மா

வணக்கம் இது வியாழன் கவிதை நேரம். ******** முருகன், வேலன், கந்தன்* ------------+------+++-----+------------- அறுபடை வீடு, அமர்ந்திருக்கும் முருகன்.- அவர் அன்பர் உள்ளம் , கொள்ளை கொள்ளும் அழகன். முத்தமிழின் முகவரியாய், பவனி வரும் கந்தன். தண்டத்தை ஏந்திக், தரணி ஆளும் தனையன். வேல் கொண்டு , வீரத்தினை, விண்ணவரும் மண்ணவரும் , அறிய வைத்தவர். வேலினைக் கொண்டே , வெற்றிவாகை சூடிய வேலவர். சூரனைக் கூறு செய்து, சேவலும் மயிலும் , ஆக்கிய செந்தூரான். சீர் ஓங்க அறிவு தரும், சிங்காரத் தேவன் மலைச் சிவபாலன். அன்னையின் சக்தியை, அகிலமே அறிய வைத்த, அகிலாண்டேஸ்வரி மைந்தன். அன்புடை மைந்தராய், உயர்ந்த நல் குருவாய், ஆசைமிகு சோதரனாய் , மகிழ்ச்சி தரும் பெருமானார். முருகன், வேலன், கந்தன் பொன்.தர்மா