உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

jeyam

jeyam

கவி 592 சொந்தம் சொர்க்கமாகுமே ஒருவர் ஒருவருக்காக வாழும் நொடிகள் இருவர் சேர்ந்தே பாதங்கள் பதிக்கும் படிகள் எனக்காக நீ உனக்காக நானென கணக்கிலடங்காத அன்பு நீளும் வானென இவளருகில் அவன் உருக அவளன்பை இவன் பருக அணைத்தபடி செல்லும் அற்புதப் பயணம் இணைந்த உயிர்களடையும் இப்பிறவிப் பயனும் காலங்கள் ஆயுளைத் தின்றிடினும் கோலத்தில் இளமை குன்றிடினும் அன்பின் பாசத்தின் தரம் குறையாது கொண்ட வாழ்க்கையின் இனிமை சிதையாது சொந்தத்தை சொத்தாக அருகாக்கிக் கொண்டு சொர்க்கத்தை மண்ணிலே உருவாக்கிக் கொண்டு திருநாளாய்க் கொண்டாடும் அழகிய வாழ்க்கை வரும் நாளெல்லாம் அறிவிக்கும் உற்சாக வாழ்த்தை காட்டிவிடும் நேசத்திற்கு வரம்புகளும் உண்டோ ஊட்டிவிட பாசமதை தாயாய் அவளன்றோ தேவை தேவி சேவையென அவன் மன்றாடுவான் பூவையவள் கொடுத்து வரம் கொண்டாடுவாள் இல்லறம் என்னும் மணம்கமழும் இன்பச்சோலையில் மெல்லக்கூடி இருபறவைகள் காதல்சொரியும் வேளையில் மண்ணின் வாழ்க்கையில் மகிழ்ச்சி கூடுகட்டிடுமே இன்பம் உணர்வுக்கு உணவு ஊட்டிடுமே ஜெயம் 26-01-20222