உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ரஜனி அன்ரன்

ரஜனி அன்ரன்

“ கொண்டாட்டக் கோலங்கள் “ கவி......ரஜனி அன்ரன் (B.A) 20.01.2022 பண்டிகைகள் விழாக்கள் கொண்டாட்டமென்றால் வண்ண வண்ணக் கோலங்கள் வாசலை அலங்கரிக்க கலைகளின் அம்சமாய் விரல்களின் வித்தகமாய் கண்ணைக் கவருமே கண்கவர் கோலங்கள் கொண்டாட்டத்தின் அடையாளமே கோலங்கள் கோலங்களின் வண்ணங்கள் எண்ணங்களுக்குப் புத்துணர்வே ! கலாச்சாரத்தைப் பேண கற்பனை வளத்தைப் பெருக்க கலையின் நுணுக்கங்களை வெளிப்படுத்த விருந்தினர்களைக் கவர நினைவாற்றலை அதிகரிக்க மங்களம் உண்டாக மகிழ்ச்சி பொங்க உயிரினங்களுக்கும் விருந்தாக மாக்கோலம் மலர்க்கோலம் புள்ளிக்கோலமென மகிழ்வினைத் தருமே மங்கையரின் கோலங்கள் ! தமிழர் வாழ்வோடு இரண்டறக் கலந்து பரம்பரை பரம்பரையாகப் பேணப்பட்டு பண்பாட்டு விழுமியங்களைக் கட்டிக் காத்த கொண்டாட்டங்கள் இன்று கோலங்கள் மாறி கேளிக்கை நிகழ்வுகளாகி பந்தா காட்டி கொண்டாட்டக் கோலங்கள் கேலிக்குரியதாகி அலங்கோலமாக அரங்கேறுகின்றதுவே காலத்தின் கோலமாக !