உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

jeyam

jeyam

கவி 558 மாற்றத்தின் திறவுகோல் மாற்றம் ஒன்றின் திறவுகோலாய் வந்ததுவே புத்தாண்டு ஏற்றம்தரும் வரவின் நாளாய் தன்னகத்தே தான்பூண்டு பிறரில் குற்றம் காண்பதனை அடியோடுதான் நிறுத்தி உடன்பிறந்த இயல்பைத்திருத்தி பழகிடுவோம் வெறுப்பைத்துரத்தி போட்டி, பொறாமை, வஞ்சகம் எதுவும் இன்றி நாட்டிலே பழகுவோம் உயிருடன் உடல்போல் ஒன்றி நேற்றையவாழ்வு போனதே, தொலைந்ததை மறந்துவிடுவோம் போற்றியே புதுஆண்டை புதிதாய்ப் பிறந்திடுவோம் அடுத்தவர் பின்நின்று புறம்பேசி என்னத்தைக் கண்டோம் கெடுத்துவிடும் சுயநலத்தை எண்ணத்தில் கொண்டோம் இருட்டான வாழ்க்கையதும் வெளிச்சத்திற்கு வரட்டும் விரட்டிவிட்டே அறியாமை புரிதலினைத் தரட்டும் வெற்றிகரமான பொய்யராக வாழ்ந்த கோலங்கள் களையட்டுமே பெற்றிருக்கும் புத்தாண்டில் புதுப்புது மாற்றங்கள் விளையட்டுமே எடுத்துவிட்டால் தவறில்லாத வாழ்க்கைக்கான சரியானமுடிவு அடுத்தடுத்து நாளுள்வரும் நற்சிந்தனையின் மாற்றங்களால் விடிவு ஜெயம் 03-01-2022