உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ரஜனி அன்ரன்

ரஜனி அன்ரன்

“ விஞ்சிடும்விஞ்ஞானம் தந்திடுமாஅமைதி?கவி..ரஜனி அன்ரன்(B.A) 10.11.2022 அண்டவெளியினில் ஆயிரம் அதிசயங்கள் அதிசயத்தைக் கண்டு கொண்டு அகிலத்தை ஆட்சி செய்யுது விஞ்ஞானம் விஞ்ஞானத்தின் விந்தைகளோ பலகோடி விபரீத விளைவுகளும் இங்கே பலநூறு விந்தைக்கும் விபரீதத்திற்கும் இடையே சிந்தை தடுமாறுது நம்வாழ்வு ! கையுக்குள்ளே உலகம் இப்போ கணணி மயமானதே அத்தனையும் கண்டுபிடிப்புக்கள் உபகரணங்கள் கற்றலில் கற்பித்தலில் புதிய மாற்றங்கள் மருத்துவத் துறையினில் மாபெரும் வெற்றி மனித வாழ்வினை இலகுவாக்கி மகத்துவம் கண்டது விஞ்ஞானம் ! விந்தையாக ஒருபுறமும் பேரழிவாக மறுபுறமும் உலகினைத் திடுக்கிட வைக்குது விஞ்ஞானம் அணுவாயுதங்கள் வல்லமையைப் பறைசாற்ற வல்லரசு நாடுகள் போரினைத் தொடர அழிவுப் பாதையில் அமைதியும் குன்றிட மனிதமனங்களும் அழுத்தமாக சூழலும் அழுக்காக மனித குலத்திற்கு சவாலாகுதே விஞ்ஞானம் !