மண் மணம் வீசும்
கிராமிய மனங்களின் வெளிப்பாடு
நாட்டின் பெருமைதனை எடுத்தியம்பும்
கலாச்சார தோன்றலின் பண்பாடு
எழில் மிகு எண்ணங்களே
ஏற்றமிகு ஆக்கங்களாக
இயல் இசை நாடகமென
நம் கண் முன்னே காட்சியாகும்
பாட்டும் கூத்தும் ஆட்டமும்
காண்போரை வியக்க வைக்கும்
கண் கவர் உடையும்இன்னிசை ஒலியும்
இதயத்தை வருடி நிற்கும்
எத்தனையோ கூத்துக்கள்
இரசித்துப் பார்த்த காலம்
மலையேறிப் போச்சு
காலம் மாறிப் போச்சு
காணாமலே போச்சு
இன்று அரிதாகிப் போனதே அத்தனையும்
நவீனமாய் வந்து விட்ட கைபேசியாலும்
சின்னத் திரை காட்டுகின்ற
தொலைக் காட்சியாலும்.
நன்றி வணக்கம்…..