வியாழன் கவிதை

வாழ்வில் கலையும். தொடரா நிலையும்…….

இரா.விஜயகௌரி

இரசித்து எழுந்து ருசித்து வாழ்ந்து
எழுச்சியில் மகிழ்ந்து இயைந்து இசைத்து
அழகியல் நுகர்ந்து அகம் மிக மகிழ்ந்து
அனுதினம் எழுதிடும் அழகின் தொடுகை

வித்தகம் நிறைத்து விரல் நுனி இழைந்து
மொழியுள் நுளைந்துமொழிவழி இதயம்
கலந்தெழ கனிந்து கசிந்து உருகி
முனைந்தெழும் முத்தமிழ் கலையே. வாழ்வு

தென்றலும் தவளும் பூத்தெழும் மலராய்
அள்ளித் தொடுக்கும்கலைகள் பெருவரம்
ஓட்டத்துள் விரைந்துஉழைப்பே வாழ்வாய்
கரைந்திடும் பொழுதினை கடந்தவர் நாங்கள்

அதனால் மொழியும் கலையும் இரு விழி வாழ்வில்
மொழிந்திட மறந்தோர் கலைதனைத் தொலைத்தார்
ரசித்தெழும் நொடிகள் எழுச்சியை வரைய
ஆளுமைத் தொடரே கலைகளுள் விதைப்பாம்