வியாழன் கவிதை

வாழ்வியல் கலையும் தொடரா நிலையும்

தங்கசாமி தவகுமார்

வியாழன் கவி :
வாழ்வியல் கலையும்
தொடரா நிலையும்
05/01/25

இன்றைய வாழ்வியல் நகர்வு
வர்த்தகம் ஆனது
மகிழ்ச்சியை சமைக்கும்
மரபு கலை மறந்து நாகரீக தேடல்
கவர்ச்சி மேடையை காணுது
மூத்தோர் நமக்காய் காத்திட்ட
சொத்து காலத்தின் பிடியில்
கரைவதை ஏற்கோம்

இன்றைய தலை முறை
ஏற்றிடும் வகையில்
சிந்தையை திறப்போம்
கலையின் தொடரால்
நம் தலை முறை தொடர்வோம்
நன்றி