பங்குனி
தமிழ் மாத இறுதியாய்
தமிழ் கடவுளின் சிறப்பாய்
திருமண பந்த நிகழ்வாய்
தரணியிலே வருவாய் அழகாய்
அசுரரின் முக்குணத்தை அழித்தாய்
முருகக்கடவுளாய் ஞானம் பெற்றாய்
தேவர்குலத்தை போரிட்டு காத்தாய்
தெய்வானையை மணந்தாய் உத்தரமாய்
பங்குனி மங்களத்தின் நாளாய்
பலருக்கு வாழ்வின் மகிழ்வாய்
பாங்காக வருவாய் வரவாய்
பங்கு நீயாய் பங்குனி நீயாய்