வியாழன் கவிதை

வாழ்வில் கலையும் தொடா நிலையும் (701)

Selvi Nithianandan 06.01.2025

வாழ்வில் கலையும்
தொடா நிலையும்

ஆயகலைகள் அறுபத்து நாங்கு (ன்)
அவனியில் வந்ததே பாங்கு
ஆரியக் கலையுடன் சேர்ந்து
அழகாயாய் புனைந்து வந்து

ஆதி காலத்தின் சொத்து
அயராத பண்பாட்டு வித்து
ஆன்மீக வாழ்விலும் காத்து
ஆயுளை கூட்டிடும் சேர்த்து

வாழ்வியல் ஓட்டத்தின் மோகம்
வந்திடும் இன்னலும் சோகம்
வரலாற்று கலையின் பாகம்
வழிமாறிச் செல்லும் தாகம்

கலையும் பணத்துக்கு நாட்டம்
கற்றதை விற்றும் தேட்டம்
சிலையும் சித்தனை ஓட்டம்
சீர்பெறட்டும் வாழ்வில் தொடர