சந்தம் சிந்தும் கவிதை

கமலா ஜெயபாலன்

மாசி
மாசிமாதம்
மனதிற்கு மகிழ்வு தரும்
அண்ணா வருவார் கொழும்பால
சிவராத்திரிக்கு சிவன் கோயில் போக
அவர் போக இல்லை
எங்கள் நால்வரையும் அழைத்துச் செல்ல
இரவிரவாய் நித்திரை விழிப்பு
நண்பிகளுன் நல்ல கொண்டாட்டம்
தீர்த்தக் குளமுடன் தித்திக்கும் உணவு
சைவ உணவு தரும் நற்சுவை
அம்மாவுக்கும் அதிலொரு உருண்டை
அக்கா எடுத்து பையில்வைப்பார்
நல்லதங்காள் காத்தவராயன் கூத்து
இப்படியான பொழுது போக்குகள்
இளம் காதல் சோடிகள் இங்கு
காணாமல் போவதும் உண்டு
எத்தனை இன்பங்கள் எம்நாட்டில் உண்டு
இவை எல்லாம் இனியெப்போ வரும்
இதில் ஒரு விசேடம் அண்ணா கேட்பார்
மலர் இன்று எத்தனை ஏக்கர்
உழுதாய்? வாலிப்ப் பருவம்!
வாய் பேசக்கூடாது/

கமலா ஜெயபாலன்