மாசி
🙏அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-60
04-02-2024
மாசி
மாசி மகம் மகத்துவம் கேளாய், கடலில் நீராடி
மனிதநேயம் வளர்ப்பாய்
ஏழை எளியவர்க்கு தான தர்மம் செய்ய
ஏங்கிய புண்ணியம் தானாய் வருமாம்.
மாசியிலே சிவத்தோடு சக்தி இணைவரே
மகாசிவராத்திரி விரதமும் இவரே
மகாசங்கடஹர போக்கும் சங்கடங்களை
மாசி பெளர்ணமி சிறப்பு தர்ப்பணத்திற்கு
சீரற்ற ரத்த ஓட்டம்,மாரடைப்பு, மனநோய்
சளி மூட்டுவலி பக்கவாதம் பலவாறாய்
பனிக்காலப் பிணியும் பின்தொடருமே மாசியில
பழத்துடன் நார்ச்சத்து காய்கறி பற்றிடுமே நோய் எதிர்ப்பு.
மூசு பனி வீசும் மாசியிலே
மூடிய கதவில் மூச்சடங்கிக் கிடக்கும்
தேடுமே எம் இதயம் வசந்தகாலம்
தென்றலும் வீசும் மனம் மகிழும்.
நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.