[ வாரம் 294 ]
“மாசி”
மாரிக்குளிர் மறைந்துபோக தை பிறக்கும்
தையிலும் தொடர்ந்து நின்றால் நிச்சயம் மாசி நீக்கும்
பன்னிருமாதங்களில் வித்தியாசமானது மாசி
நாளும் குறைந்தது, சைவத்தின் பற்றும் மிகுந்தது
ஆங்கிலவருடத்தில் இரண்டாம் மாதம்
தமிழிலோ பதினோராம் மாதம்
இருபத்தெட்டு நாட்கள்கொண்டது
நாலாண்டுக்கொருமுறை இருத்தொன்பதாவது
சைவத்தோடு இணைந்து தயிழ் வளர்ப்பது
ஆண்களுக்கொருநாள் சிவராத்திரி நோற்பது
திருவிளையாடல் அறுபத்துமூன்றும் அகத்தேகொண்டது
பூரத்திருநாளில் பிரணவமந்திர உபதேசம் பெற்றது
அடி முடி காணாது மாலும் அயனும் அரண்டு போனது
மாசி மகத்தில் திருமாலின் அவதாரங்கண்டது
மாசி பௌர்ணமியில் ஹோலிபண்டிகை கொண்டாடுவது
சிவனும் பார்வதியும் திருமணபந்தத்தில் இணைந்தது
ஆறு,குளம், நீர் நிலைகளில் மாசியில் நநீராடல் புண்ணியமாவது
சைவக்கிரியைகள் யாவும் மாசியில் நிறைவேற்றல் அற்புதமானது
இத்தனை சிறப்புங்கொண்ட மாசி மாதங்களில் பெருமை வாய்ந்தது
சைவத்தமிழராய் பிறந்து பேறடைவது மாசி மாதமே உன்னால் நிச்சயமானது.
நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.