சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 294
04/02/2025 செவ்வாய்
மாசி
———
ஆங்கிலத்தில் இலக்கம் இரண்டு!
ஆனால் எமக்கோ பதினொன்று!
ஆங்கிலத்தில் நாள் இருபத்தேழு!
ஆனாலும் லீப்பில் கூடிடும் ஒன்று!
தையின் தங்கையாய் ஆனவள்!
தணலாம் பங்குனிக்கு மூத்தவள்!
பொய் மழை காண் பூவையவள்!
பொன்னு நெல்மணி தருபவள்!
மாமாங்க மகம் தீர்த்தம் தருமே!
மகத்தான சிவன் விழா வருமே!
தெம்மாங்கு கூட்டம் சேருமே!
தேவனவன் அருள் சொரியுமே!
சிவராத்திரி விரத நாள் வருமே!
சிவனின் ரதம் சீராய் நகருமே!
தவமிருந்த முனி நினைவு வருமே!
தலத்தில் அதிக கூட்டம் கூடுமே!
தை, மாசி தந்திடும் குளிரால்,
தயங்கி வரும் சூரியன் வரவால்,
வையகத் துறங்கு என முன்னோர்
வாய்மொழியாய் விதி சொன்னார்!
நன்றி
“மதிமகன்”