சந்தம் சிந்தும் கவிதை

ஜெயம் தங்கராஜா

சசிச

கவிதை

அழகிய உணர்ச்சிகளின் வெளிப்பாடு
எழில்கொண்ட ஓசைகளின் சந்தங்களோடு
இன்றியமையாத சொற்சேர்க்கையின் வடிவம்
பண்பாண வார்த்தைகளின் படிமம்

வாத்தை ஜாலத்தின் அலங்கரிப்பு
கோர்த்தே கற்பனையின் திரிப்பு
எதுகை மோனைகளுடன் பிறக்கும்
புது கவிதையாகியும் சிறக்கும்

பலர் எழுதினால் கவிதை
சிலர் பேசினாலே கவிதை
கேட்டால் செவிகளுக்கு இன்பம்
பார்த்தால் விழிகளுக்கு இன்பம்

அற்புதமாம் மொழிப் பிரயோகங்கள்
சிந்திக்க வைக்கும் வாசகங்கள்
மெருகூட்டிவிட வனப்பாகும் கலை
அருமருந்து இதைப்போல் இல்லை

எண்ணங்களை எழுத்தில் வடிக்கும்
இன்னுமின்னும் படைத்திடத் துடிக்கும்
சரியான வார்தைகளும் பேறாக
விரல்கள் கிறுக்கிடும் நூறாக

ஜெயம்
31-01-2025