30.01.25
ஆக்கம் 176
ஓடும் வெண்ணிலவே
வெண்ணிலவே
வெண்ணிலவே
விரைந்து ஏன்
ஓடுகின்றாய் ?
உன்னைத் தொட்டு
விடலாம் என்றல்லவோ
நானும் எட்டி எட்டி
நடக்கின்றேனே
நீயோ யாரும் தொட்டு
விடக் கூடாது என்று
வெட்டி வெட்டிப் போவதும் சரிதானோ
ஒரு சிலவேளை சீவிச்
சிங்காரித்து சிரித்தபடி
அழகு தேவதை போல்
வருகின்றாய்
சில நேரம் அழுத முகமுடன் அரைகுறை
ஆகத் திரிகின்றாய்
உனது அழகில் சொக்கி
நிற்கும் மாந்தரை விட்டு விட்டு ஓடிச் செல்வதும்
முறைதானோ ?
நீள்வான வெளியில்
மெல்ல மெல்ல நகர்ந்து
சென்று உன் அழகில் மயங்க வைக்கத் துரத்திச் செல்லும் சூரிய மன்னனோ உன்
வலையில் சிக்கக்
கூடாதென்று கீழ்
வானத்தில் உன் பார்வை படாது மறைந்து கொண்டதால்
அழுது முகம் சிவந்து
அரைகுறையானாயோ?
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து